Tuesday, February 25, 2014

இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்.

முன்பு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறைய பாலிசிகளை விற்றுலாபம் சம்பாதித்தன. ஆனால், இன்றைக்கு பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை சரண்டர் செய்வதன்மூலம் கணிசமான லாபத்தைச் சம்பாதித் து வருகின்றன என்பது ஆச்சரியமான தகவல்.
 
கடந்த 2011-12-ம் நிதி ஆண்டி ல் எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கு மேல். ஹெச். டி. எஃப்.சி. ஸ்டாண்டர்டு நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் 185 கோடி ரூபாய். இது அந்நிறுவனத்தின் மொத்த லாபத்தில் 68%.
பாலிசி சரண்டர் மூலம் இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் இப்படி லாபம் சம்பாதித்தாலும், பாலிசிதாரர்களுக்கு இதனால் மிகப் பெரிய இழப்பே ஏற்படுகிறது. இந்த இழப்பைத் தவிர்க்க இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வியை, நிதி ஆலோசகர் ஹரிஹரனிடம் கேட்டோம்.
”இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்த வரை, எண்டோவ்மென்ட் போன்ற பாரம்பரிய பாலிசிகளில் முதல் மூன்று வருடத்தில் பாலிசிகளை சரண்டர் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. அதன்பிறகு செய்தாலும் கட்டிய பிரீமியத்தில் சுமார் 50 முதல் 60% கிடைக்கும்.     பிரீமியம் செலுத்தும் காலத்தில் சுமார் 75% கடந்தபிறகு சரண்டர் செய்தால் மட்டுமே ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்” என்றவர், யூலிப் பாலிசிகளில் சரண்டர் கட்டணம் எப்படி இருக்கிறது என்பதை விளக்கிச் சொன்னார்.
யூலிப் பாலிசிகளில் சரண்டர் கட்டணத்தை ஐ.ஆர்.டி.ஏ. மாற்றி அமைத்ததன் மூலம் பாலிசிதாரர்கள் அடைய வேண் டிய நஷ்டம் குறைந்திருக்கிறது. இதற்கு முன்பு யூலிப் பாலிசி எடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்தால் ஃபண்ட் மதிப்பில் 90% வரை சரண்டர் மதிப்பாகப் போய்விடும். தற்போது ஓராண்டுக்குள் பாலிசியை சரண்டர் செய்தால் ஃபண்ட் மதிப்பு அல்லது ஆண்டு பிரீமியத் தில் ரூ.6,000 சரண்டர் மதிப்பாக இருக்கும். இரண்டாண்டு எனில் 5,000. மூன்றாண்டு எனில் 4,000. நான்காண்டு எனில் 2,000 ரூபாய் க்கும் குறைவாக சரண்டர் மதிப்பு இருக்கும். ஐந்தாவது ஆண்டுக்குப் பிறகு இந்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது புதிய விதி.
இதுபோன்ற சரண்டர் கட்டணம், பாரம்பரிய பாலிசி களுக்கு வரையறுக்கப்பட வில்லை என்பதால், ஒவ்வொரு நிறுவனமும் திட்டத்தின் தன்மையைப் பொறுத்து சரண்டர் மதிப்பை வைத்திருக்கிறது” என்றவர், பாலிசியை சரண்டர் செய்யாமல் இருக்க என்ன செய் யவேண்டும் என்றும் சொன்னா ர்.
இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும்முன் பாலிசிக் காலம் முடிகிற வரை பிரீமியம் கட்டும் தகுதி நமக்கு இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்தே பாலிசி எடுக்க வேண்டும். அடுத்து, இன்ஷூரன்ஸை முதலீடாகப் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால், தொடர்ந்து பிரீமியம் கட்ட முடியாதச் சிக்கல் ஏற்படும்.
பாரம்பரிய பாலிசிகளைவிட குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பாலிசிகளை எடுத்துக் கொள்வது நல்லது. இந்தபாலிசி எடுத்ததுபோக மீதமுள்ள பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக் கும்.
உதாரணமாக, 30 வயதான ஒருவர் 30 ஆண்டுகளுக்கு 25 லட்ச ரூபாய் கவரேஜுக்கு டேர்ம் பாலிசி எடுக்கிறார் எனில், ஆண்டுக்கு 6,030 ரூபாய் கட்டி னால் போதும். இதே தொகைக்கு பாரம்பரிய பாலிசி எடுக்க வேண்டுமெனில் ஆண்டுக்கு 83,000 ரூபாய் கட்ட வேண்டும். இந்த பணத்தில் 6,030 ரூபாயை மட்டும் டேர்ம் பாலிசிக்கு கட்டிவிட்டு, மீதியை மியூச் சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், முப்பதாவது ஆண்டு முடிவில் 1.15 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கும். ஆனால், பாரம்பரிய பாலிசி யில் வெறும் 74 லட்ச ரூபாயே கிடைக்கும்” என்றவர், ”உங்களால் எவ்வளவு பிரீமியம் கட்ட முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே பா லிசி எடுங்கள்!” என்றார். அவர் சொல்வ து சரிதானே!

No comments:

Post a Comment