Tuesday, February 25, 2014

டேர்ம் இன்ஷூரன்ஸ் நீங்க எடுத்தாச்சா?

சமீப காலமாக ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டும்’ என பலரும் வற்புறுத்தி வருவதாகச் சொல்கிறார்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள்.
இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு ணர்வு மக்களிடம் பெருகி வருவதே இதற்கு காரணம். அது என் ன டேர்ம் இன்ஷூர ன்ஸ் என்று கேட்கி றீர்களா?
பிரீமியம் மிகக் குறைவான இன்ஷூரன்ஸ் பாலிசியான இது, சுத்தமான ஆயுள் காப்பீட்டுத் திட்டம். அதாவது, உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். இல்லாவிட்டால் நாம் கட்டிய பணம் திரும்ப கிடை க்காது.
மற்ற பாலிசிகளைபோல் இதை சரண்டர் செய்தால் பணம் எதுவும் கிடையாது. அதாவது, பிரீமியம் கட்டும் காலத்தில் மட்டும்தான் இந்த பாலிசி செயல்பாட்டில் இருக்கும். எனவே, பிரீமியத்தைக் கெடு தேதி முடிவதற்குள் கட்டிவிடு வது நல்ல து. இதர லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்போல் கெடு விதித்த காலம் முடிந்த பிறகு இந்த பாலிசியை புதுப்பித்துக் கொள்ள முடி யாது.
ஒருவருடைய ஆண்டு வருமானத்தைப் போல சுமார் 10 முதல் 15 மட ங்கிற்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்வது அ வசியம்.
இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி களை அதிக அளவில் விநியோகிக்க வேண்டும் என இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், ஏஜென்டுகளும் நினைக்கவில்லை. இந்த பாலிசி விற்றால் குறைவான கமிஷனே கிடைக்கும் என்பதால் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் இந்த பாலிசி பற்றி அதிகம் பரிந்துரைப்ப தில்லை.
‘முப்பது வயதான ஒருவர் ஒரு கோடி ரூபாய் கவரேஜுக்கு டேர்ம் பிளான் எடுத்தால், அவரது 65 வயது வரை கவரேஜ் பெற மாத பிரீமியம் சுமார் 820 ரூபாய்தான்.
குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கிறது என்பதால் தற்போது டேர்ம் பிளான்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் ஆன் லைன் டேர்ம் பிளான் எடுப்பது அதிகரித்துள்ளது” என்கி றார் டேர்ம் இன்ஷூரன்ஸ் ஸ்பெலிஸ்ட் ஒருவர்.
அது சரி, நீங்க டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தாச்சா?

No comments:

Post a Comment