Friday, February 7, 2014

ஆயுள் காப்பீட்டின் அவசியம்.

ஆயுள் காப்பீடு என்பது சேமிப்பு அல்லது முதலீடு என்று பலரும் நினைக்கின்றனர்.இது தவறான எண்ணம். ஒருவன் சேமிக்கும் போது, அவனுக்குத் தேவைப் படும் போது கிடைக்கும் தொகை அவன் கடந்த காலத்தில் சேமிப்பில் போட்ட பணமும் அதற்கான வட்டியுமே ஆகும். வங்கியில் குறித்த காலத்திற்கு போடும் பணத்திற்கும், தேசிய சேமிப்பு பத்திரத்தில் செய்யும் முதலீடு, பரஸ்பர நிதி மற்றும் இதர சேமிப்புக்களுக்கும் இது பொருந்தும்.


  வணிக சூதாட்டங்களான பங்கு பத்திரங்கள், ஸ்டாக் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்யும் போது, அங்கு நிதி நிலைகளுக்கு ஏற்படும் நிரந்தரமற்ற தன்மையால் நமது பணத்திற்கு பேரிழப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.அப்படி இழப்பு ஏற்படாவிட்டாலும், எந்த நேரத்திலும் நமக்கு கிடைக்கும் பணம் நாம் முதலீடு செய்த பணமும்,அதற்குண்டான மதிப்பு உயர்வுத் தொகையும் மட்டுமே.



    ஆனால், ஆயுள் காப்பீட்டில் நமக்கு கிடைக்கும் தொகை நாம் சேமித்த மொத்த பிரிமியத் தொகை மட்டுமல்ல; சேமிப்பு காலம் முடிந்து, அதாவது அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் நாம் விரும்பக் கூடிய மொத்த தொகையே ஆகும். இறுதியில் கிடைக்கும் தொகை ஆரம்ப காலத்திலேயே தெரிந்து விடுகின்றது. சேமிப்பிலிருந்து ஒருவருக்கு பின்னாளில் அப்பணம் வழங்கப் படுகின்றது.



     ஒருவர் தன்னுடைய சேமிப்பில் இருந்து பல வருடங்களுக்குப் பிரிமியம் செலுத்துகிறார். தாம் உயிருடன் இருக்கும் வரையிலோ அல்லது தான் தேர்ந்தெடுக்கும் குறைந்த காலத்திற்கு பணம் கட்ட வேண்டும். உறுதி அளிக்கப் பட்ட தொகை மாறுவதில்லை. இந்தவித நன்மையை செய்யும் வேறு எந்த வித திட்டமும் கிடையாது. ஆகவே ஆயுள் காப்பீடுக்கு மாற்று எதுவுமே இல்லை.



இது தவணை முறையில் பொருள் வாங்கும் திட்டம் போன்றதல்ல. தவணை முறை திட்டத்தில் வாங்கப்படும் பொருளை உடனடியாகப் பெற்றுக் கொண்டு விலை தவணை முறையில் பின்னர் செலுத்தப் படுகிறது. இறப்பு ஏற்படுமானால் கட்டாத தவணைகள் தள்ளுபடியாவதில்லை. அத்தவணைகளை குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் கட்டியாக வேண்டும்.



    ஆயுள் காப்பீட்டில் பிரிமியம் செலுத்துவது இறந்த உடன் நின்று விடும். தவணைகள் தொடர்ந்து கட்ட வேண்டியதில்லை. ஆயுள் காப்பீட்டினைப் போல பயனளிக்கும் வேறு பொருளாதார அளவிலான மாற்றுத்திட்டங்கள் ஏதுமில்லை.



மற்ற சேமிப்புக்களுடன் ஒப்பிடும் போது ஆயுட் காப்பீடு கீழ்க்கண்ட அனுகூலமான பலன்களைக் கொண்டிருக்கிறது: 



இறப்பு ஏற்பட்டால் பணம் எளிதில் பட்டுவாடா செய்யப்படுகிறது



   வாரிசு நியமனம், உரிமை மாற்றம் போன்ற வசதிகளால் வாரிசுதாரர் மிகவிரைவில் பணத்தைப் பெறமுடியும்.சில வங்கிக் கணக்குகளுக்கு வாரிசு நியமன வசதி தற்போது உள்ளது. 



   சேமிப்பு திட்டத்திற்கு ஒருவகையான கட்டாயம் ஏற்படுகிறது. மற்ற வகைகளில், தனது ஒரிஜினல் சேமிப்பு திட்டத்தை கைவிட்டால் நஷ்டம் ஏதும் ஏற்படாது. ஆனால், ஆயுட் காப்பீட்டில், சேமிப்பதை இடையில் நிறுத்தினால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.



    கடன்காரர்கள் ஆயுட் காப்பீட்டுத் தொகையில் உரிமம் கோர முடியாது. நீதிமன்ற உத்தரவுகள் ஆயுட்காப்பீட்டு பணத்தை பெறுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. 



ஆயுட் காப்பீடு மூலம் வருமான வரிச்சலுகைகளையும் பெற முடியும். பாலிசிகளை பிறருக்கு எளிதாக உரிமை மாற்றம் செய்ய முடியும். 



  நமது தேவையின் போது, ஈட்டின் பேரில் பணம் சிரமமின்றிக் கிடைக்கிறது. பாலிசியின் பெயரில் எளிதில் கடன் பெறலாம். கடன்காரர்கள் பாலிசி பணத்தின்மீது உரிமை கோருவதையும் தவிர்க்க முடியும். பயன்தாரர்களின் நலன்கள் பாதுகாப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment