Tuesday, February 25, 2014

ஒருவர் எத்தனை இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாம்?

ஒருவர் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிகூட இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறோ; அதைவிட பெரிய தவறு, அளவுக்கு அதிகமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருப்பது. நிறைய இன் ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதன் மூலம் ஒருவர் தனது  வாழ்க்கையை வலிமையாக காப்பீடு செய்திருப்பதாக நினைக்கிறார். ஆனால், அவர் பணம் எந்த பிரயோஜனமும் இல்லாமல் வீணாக போய்க் கொண் டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிவதே இல்லை.
”உள்ளபடி ஒருவர் எத்தனை இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலா ம்?” என நிதி ஆலோசகர் சங்கரிடம் கேட்டோம். வாசகர்கள் பலருக் கும் இருக்கும் இந்த சந்தேகத்துக்குத் தெளிவான பதிலைச் சொன் னார் அவர்.
முதலீடல்ல..!
”இன்ஷூரன்ஸ் தொடர்பான குழப்பங்கள் மக்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஒருவரின் வருமானம் தடைபடும் நிலையில், அவரைச் சார்ந்தவர்கள் தொட ந்து பணப்பலன்களை அனுபவிக்க மட்டும்தான். ஆனால், நம் மக்களில் பலர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒரு முதலீடாகவே பார்க்கிறார்கள். இதனால் நிறைய பாலிசிகளை எடுத்துத்தள்ளுகிறார்கள் .
ஒருவர் எத்தனை பாலிசி எடுக்கிறார் என்பதைவிட எதற்காக பாலிசி எடுக்கிறார், அதில் எவ்வளவு கவரேஜ் கிடைக்கிறது என்று பார்ப்பதே முக்கியம். இதற்கு இன்ஷூரன்ஸ் பற்றிய நமது புரிதலை முதலி ல் மாற்றி, சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் குழப்பங்கள் தீரும்.
எக்கனாமிக் வேல்யூ!
இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இறங்கும் முன், முதலில் நமது பொருளாதார மதிப்பு ‘எக்கனாமிக் வேல்யூ’ என்ன என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நமது வருமானம், நம்மைச் சார்ந்தவர்கள், அவர்களது தேவை, நமது சொத்து மதிப்பு, எவ்வளவு ரூபாய் வரை பிரீமியம் செலுத்த முடியும் என்பது போன்ற விஷயங்களை அவசியம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக, ஆண்டு வருமானத்தைப் போல 15 முதல் 20 மடங்கு தொகைக்கு காப்பீடு செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும். அதே நேரத்தில், புதிதாக வேலைக்குச் சேரும் நிலை யில் மூன்று அல்லது நான்கு மடங்கு தொகைகளிலிருந்து தொடங்குவதுதான் சரியானது.
டேர்ம் இன்ஷூரன்ஸ்!
பாலிசி முதிர்வின்போது பணம் திரும்பக் கிடைக்கும் பாலிசிகளில்,பிரீமியம் அதிகமாகவே இருக்கும். ஆனால், அதற்கு ஏற்றாற்போல் முதிர்வுத் தொகை லாபகரமாக இருக்குமா? என்றால் இருக்காது. இதுபோன்ற பாலிசிகளில் சுமார் 5 முதல் 6 சதவிகிதம்தான் வருமானத்தை எதிர்பார்க்க முடியும். தபால் அலுவலகச் சேமிப்பு தரும் லாபத்தைவிட இது குறைவு.
பாலிசி எடுப்பதன் நோக்கம் அதிக இழப்பீடு கிடைக்க வேண்டும் என் பதே. குறைந்த பிரீமியத்தில் அதிக இழப்பீடு பெற வாய்ப்பளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை எடுப்பதுதான் சரியானது. ஒருவரின் ஆண்டு வருமானத்தில் சுமார் 5% அளவுக்கும் பிரீமியம் செலுத்தும் அளவுக்கு பாலிசி எடுத்துக் கொள் வது நல்லது. எண்டோவ் மென்ட், யூலிப் பாலிசிகளில் முதலீட்டு நோக்கில் பணம் போட்டு காத்திருந்து குறைவான வருமானத்தைப் பெறுகிறார்கள் பலர்.
இன்னும் சிலர் சென்டிமென்டில் சிக்கி குழந்தைகள் பெயரில் அல்லது குழந்தைகள் பெயரில் உள்ள பாலிசிகளை எடுக்கிறார்கள். அதுவும் தவறுதான். குடும்பத்தில் யார் வருமானம் ஈட்டுகிறார்களோ அவர்களின் பெயரில்தான் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். இந்த பாலிசிகளு க்கு பதில், குறைந்த பிரீமியத்தில் டேர்ம் பிளான் எடுத்துவிட்டு மீதி க்கு பி.எஃப்., பி.பி.எஃப், ஃபிக்ஸ ட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பார்க்க முடியும் என்பதில் சந்தேகமே வேண்டாம். உங்களின் தேவைகளையும் எளிதில் நிறைவேற் றிக்கொள்ள முடியு ம்.
இன்னும் சிலர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பென்ஷன் பாலிசிகளை எடுக்கிறார்கள். இவையும் குறைந்த வருமானத்தை தருபவையாகவே இருக்கின்றன. அவற்றுக்குப் பதில் டாப் ஈக்விட்டி டை வர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.
எத்தனை பாலிசிகள்?
ஒருவர் இத்தனை பாலிசிகள் தான் எடுக்கலாம் என்று எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால், ஒருவரது ‘எக்கனாமிக் வேல்யூ’ அடிப்படையில் ஒரே ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி கூட எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு, கடன் வாங்குவது மற்றும் இதர பொறுப்புகளின் அடிப்படையில் பாலிசி கவரேஜ் தொகை அதிகரித்துக் கொள்ளலாம்.
இன்ஷூரன்ஸ் என்பது நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு கவசம். முதலீடு என்பது நம் பணத்தைப் பெருக்கும் ஆயுதம் என்கிற வகையில் அணுக நாம் கற்றுக் கொண்டால் மட்டுமே நம் தேவைக்கு ஏற்ப டேர்ம் பிளான் மட்டு ம் எடுத்துவிட்டு, இதர முதலீட்டுத் திட் டங்களில் முதலீடு செய்து, நல்ல பலனைக் காண முடியும்” என்றார்.
ஏற்கெனவே நிறைய பாலிசி எடுத்தவர்களை விட்டுவிடுவோம். இனிமேல் நிறைய பாலிசி எடுக்க நினைக்கிறவர்கள் அந்த தப்பை செய்யாமல் இருந்தால் சரி!

No comments:

Post a Comment