Friday, February 7, 2014

காப்பீடு என்றால் என்ன?

காப்பீடு என்பது காப்பீட்டு நிறுவனத்திற்கும் (இன்சூரர்) பாலிசிதாரருக்கும் (இன்சூர்ட்) இடையே ஆன ஒரு ஒப்பந்தமாகும். ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு, குறிப்பிடப்பட்டத் தொகையை ஈடிற்கு (ப்ரீமியம்) பதிலாக பாலிசிதாரருக்குத் தருவதாக, காப்பீட்டு நிறுவனம் உறுதியளிக்கிறது.

நிலை ஆய்வு 

35 வயது அஜய் ஒரு 'மல்டி நேஷனல் நிறுவனத்தில்'  (MNC) வேலை செய்கிறார்.  அவருக்கு விஜய் என்ற பத்து வயது மகன் இருக்கிறான். மகன் மருத்துவராக வரவேண்டும் என்பது தந்தையின் கனவு. 

அஜயின் மனைவி ஒரு குடும்பத் தலைவி மற்றும் அவருடைய பெற்றோர்கள் ஓய்வு பெற்று அவரை சார்ந்து இருக்கின்றனர்.  

வட்டிக்கான  கடனை அடைத்துக்கொண்டிருக்கும் அஜய், மகனின் மேற்படிப்பிற்கும், திருமணத்திற்கும் மற்றும் சொந்த ஓய்வு காலத்திற்கும் மாதந்தோறும் முதலீடு செய்து கொண்டிருக்கிறார். 

விஜய்க்கு கிடைப்பது எல்லாமே நல்லதாக இருக்கவேண்டும் என்பது அஜயின் ஆசை. தன்னுடைய பெற்றோர்களைப் போல ஓய்வு காலங்களில் மகனை சார்ந்து இருக்கக்கூடாது என்றும் நினைத்தார்.  

இதுவரை அஜயின் கணக்கு கூட்டல்கள் சரியாக நடந்துகொண்டிருந்தன. ஆனால், பின்வரும் நிலைமையில் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவும். 

ஒரு நாள், அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அஜயை ஒரு விபத்து கொன்றது. இப்போது என்ன நடக்கும்?  அவருடைய குடும்பத்தை, மகனுடைய படிப்பை,  திருமணத்தை, வீட்டுக்  கடனை யார் பார்த்துக்கொள்வார்கள்?  அவருடைய மறைவில் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதற்கு, அவருக்கு என்ன விருப்பத் தேர்வுகள் (options) இருக்கின்றன? 

அஜயின் நிலையிலிருந்து இந்தக் காட்சியை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்துப் பார்க்கவும். நீங்கள் என்ன செய்வீர்கள் ? காப்பீட்டின் நோக்கம் உங்களை பயமுறுத்துவதல்ல. இந்த நிலை ஆய்வின் மூலம், அஜயின் குடும்பத்தை இந்த சூழ்நிலையில் காப்பாற்றக்கூடிய காப்பீட்டின் முக்கியத்துவத்தை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறோம்.

ஆகவே, இந்த நிலைமையில் காப்பீடு எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம். குடும்பத் தலைவனின் மறைவில் குடும்பத்தைக் காப்பாற்றுவது ஆயுள் காப்பீடு ஒன்றே. அஜயிற்கு தேவையான ஆயுள் காப்பீடு இருந்திருந்தால், அவருடைய மறைவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மூலம் கிடைக்கும் காப்பீட்டுத் தொகை குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கும். வட்டிச்  செலவுகள், விஜயின் படிப்பு மற்றும் திருமணம்,  வீட்டுக்  கடன் எல்லாவற்றுக்கும் அந்தத் தொகை உதவியாக இருந்திருக்கும்.
  
மேலே கொடுத்த நிலைமையில், காப்பீடு அதாவது ஆயுள் காப்பீடு , எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொள்வதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

யோசனை செய்யவும்...

ஒரு குடும்பத் தலைவனாக உங்களை ஆட்படுத்தக்கூடிய அபாயங்கள் என்ன? நீங்கள் பாதுகாக்க நினைக்கும் நிதி இலக்கங்கள் இருக்கின்றனவா? 

காப்பீடு எவ்வாறு செயல்படுகிறது?

காப்பீட்டின் தேவையைப் புரிந்துகொண்ட நீங்கள்,  அது எவ்வாறு செயல்படுகிறது என்றும் அறிந்துகொள்ளுங்கள். அஜயைப் பற்றிய நிலை ஆய்வையே எடுத்துக்கொள்வோம். மேலே குறிப்பிட்ட மரணம் ஒரு அபாய கட்டம்தான். அவர்  மேலும் பல வகையான அபாயங்கைள எதிர்கொள்ளலாம் - 
உதாரணத்திற்கு சில நேரங்களில் மருத்துவ உதவி தேவைப்படலாம்,  வீட்டில்  தீ விபத்து ஏற்படலாம். இதுபோன்ற அபாயங்களை அஜய் பல்வேறு வகைகளில் கையாளக்கூடும்.

அபாயத்தை வைத்திருத்தல்:

 இதுபோன்ற அபாயங்களை எதிர்கொள்வதற்கான ஒரு எளிய வழி,  அவற்றை வைத்திருப்பதாகும், அதாவது அஜய் இவற்றை வருவதுபோல தனியாகவே ஏற்றுக்கொள்ளுதல். நல்ல காலத்தில் எந்த இடர் அல்லது அபாயங்களும் ஏற்படவில்லையென்றால், அஜய் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால்,  அஜய் பிரச்சனையில் அகப்பட்டுவிடுவார். ஆகையால் தனியாக அவற்றை ஏற்றுக்கொள்ளுதல் புத்திசாலித்தனமல்ல. 

அபாயத்தைக் கை மாற்றுதல்: 

இந்த இடர்களை கையாள்வதற்கான மற்றொரு வழி, 
அதை நல்ல முறையில் கையாளும் ஒருவரிடம் ஒப்படைப்பதாகும். எளிமையான வார்த்தைகளில்,  இடர்களைத் தாங்கக்கூடிய சக்தியில்லாத ஒருவரிடமிருந்து தாங்கும் சக்தியுள்ள ஒருவருக்கு இடர்களைக் கைமாற்றுதல்,  இதுதான் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. 

இந்த தருணத்தில், காப்பீட்டைப் பற்றித் திரும்ப விவரித்தால் உதவியாக இருக்கும்: 

காப்பீடு என்பது காப்பீட்டு நிறுவனத்திற்கும் (இன்சூரர்) பாலிசிதாரருக்கும் (இன்சூர்ட்) இடையே ஆன ஒரு ஒப்பந்தமாகும். ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு, குறிப்பிடப்பட்டத் தொகையை ஈடிற்கு (ப்ரீமியம்) பதிலாக பாலிசிதாரருக்கு தருவதாக, காப்பீட்டு நிறுவனம் உறுதியளிக்கிறது.  
காப்பீடு என்பது காப்பீடு எடுக்கும் நபரின் அபாயக்கட்டங்கைள ஒரளவிற்கு நிதியளித்து (ப்ரீமியம்) காப்பீட்டு நிறுவனத்திற்கு கைமாற்றும் செயலமைப்பாகும். ஆகையால் அஜய் காப்பீடு எடுத்து, ப்ரீமியம் செலுத்தி அவருடைய அபாயங்களை காப்பீட்டு நிறுவனத்திற்கு கை மாற்றிவிடலாம். 

அஜயைப் போன்றவர்களிடமிருந்து காப்பீட்டு நிறுவனங்கள் ப்ரீமியங்களை பெற்றுக்கொண்டு, அதாவது இதுபோன்ற அபாயங்கள் ஏற்படக்கூடிய அத்தைன பேரிடமிருந்தும் பெற்றுக்கொண்டு, அந்த நிதியை அபாயச் சேர்மத்தில் (risk pool) வைக்கும். ஒரே நேரத்தில் எல்லோருக்கும் இடர்கள் 
ஏற்பட வாய்ப்பில்லை,ஆகையால் இடர்கள் ஏற்படுபவருக்கு அபாயச் சேர்மத்திலிருந்து நிதியளிக்கப்படும். 

ஆகையால் மேலே கூறிய விளக்கங்களின்படி காப்பீடு என்பது: 

• உரிமையாளரிடமிருந்து (இன்சூர் செய்யப்பட்ட நபர்) அபாயத்தை கை மாற்றி; 
• அபாயத்தை தாங்கக்கூடிய வேறொரு நபருக்கு (இன்சூரர்) அளித்தல்; 
• ஒரு தொகைக்கு(ப்ரீமியம்) பதிலாக. 

காப்பீடு வியாபாரம், சொத்துக்களின் மதிப்பை பாதுகாப்பதோடு சம்பந்தப்பட்டதாகும். சொத்துக்கள் உரிமையாளர்களுக்கு நன்மைகள் அளிப்பதால்,  அவை மதிப்பு மிக்கவையாக இருக்கின்றன. அளிக்கப்படும் நன்மை வருவாய் ஆகவோ (காரை வாடகைக்கு விடுவது) அல்லது 
வசதியாகேவா (சொந்த பயணத்திற்கு காரைப் பயன்படுத்துதல்) இருக்கலாம். 
வருவாயை உண்டாக்குவதால் மனிதர்களிடம் சொத்துக்கள்தான். எல்லோருடைய மரணமும் நிச்சயிக்கப்பட்டதுதான், ஆனால் மரண நேரம் நிச்சயிக்கப்பட்டதல்ல. ஒரு சம்பாதிக்கும் நபர் எதிர்பாராமல் இளைமயிலேயே இறந்துவிட்டால்,  அந்தக் குடும்பத்தின் வருவாய் 
குறைந்துவிடுகிறது. அந்தக் குறைவை நிறைவாக்குவதற்குத்தான் காப்பீடு செயல்படுகிறது. மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் பிற்காலத்தின் வருவாயை பாதுகாப்பதற்காக ஒவ்வொருவருக்கும் சிறிய வயதிலேயே காப்பீடு தேவைப்படுகிறது. ஆயுள் காப்பீட்டால் ,  ஒரு நபரின் மரணத்தால் ஏற்படுகின்ற பணக்க‡ஷ்டத்திலிருந்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.

உணரவும் 
காப்பீட்டால் அபாயம் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. 
அபாயத்தால் ஏற்படுகின்ற இழப்பை ஈடுகட்டத்தான் முடியும். 



No comments:

Post a Comment