Tuesday, February 25, 2014

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் வாங்க என்ன வழிமுறை? எந்தெந்த பாலிசிகளுக்கு கடன் கிடைக்கும்..?!

இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது நம் உயிருக்குப் பாதுகாப்பு தரும் இன்றியமையாத விஷயம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நமக்கு அவசரமாகப் பணம் தேவைப்படும் சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து உதவுகிற நண்பனாகவும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரி யாது.
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் வாங்க என்ன வழி முறை? எந்தெந்த பாலிசிகளுக்கு கடன் கிடைக்கும் என்கிற கேள் விகளைக் கேட்டு எல்.ஐ.சி. நிறுவனத்தை அணுகினோம். நமக்கு கிடைத்த விவரங்கள் இதோ உங்களுக்காக…
என்ன வழிமுறை?
இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கடன் வாங்குபவர்கள் பாலிசி எடுத்துள்ள கிளை அலுவலகத் தில் கடனுக்கான விண்ணப்பத் தைத் தெளிவாகப் படித்துப் பார் த்துவிட்டு, அதில் கேட்கப்பட்டுள்ள பாலிசிதாரர்களின் விவரங் கள், பாலிசியின் விவரம் மற்றும் வங்கிக் கணக்கு பற்றிய விவரங்கள் போன்றவற்றை பூர்த்தி செய்து அதனுடன் ஒரிஜினல் பாலிசிபத்திரத்தைச் சேர்த்துத் தந்தால், சில நாட்களில் கடன் கிடைத்து விடும்.
வட்டி எவ்வளவு?
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து வாங்கும் கடனுக்கு தற்போது 9% வட்டி (மாறுதலுக்கு உட்பட்டது) வசூலிக்கப்படுகிறது. மற்ற எந்த கட னுக்கான வட்டியோடு ஒப்பிட்டாலும் இந்த கடனுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவு. இந்த கடனுக்கான வட்டியை ஆறு மாதத்தி ற்கு ஒருமுறை எல்.ஐ.சி.யின் எந்த கிளையில் வேண்டுமானாலும் கட்ட லாம்.
எப்போது கடன் கிடைக்கும்?
பொதுவாக பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளில் கடன் கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்கான மொத்த பிரீமி யமும் செலுத்தியிருக்கவேண்டியது அவசியம். ஒருவர் எத்தனை பாலிசி வைத்திருக்கிறாரோ, அத்தனை பாலிசிகள் மூலமும் (கடன் பெறும் தகுதி இருந்தால்) கடன் பெறலாம்.
எதற்கெல்லாம் கடன் வாங்கலாம்?
பாலிசிகளில் கடன் வாங்கும் போது குறிப்பிட்ட காரணத்திற்காகத் தான் கடன் வாங்க வேண்டுமென்றில் லை. பாலிசிதாரர் தன் தேவைக்கேற்ப, தகுதி இருந்தால் எந்த காரண த்திற்கு வேண்டு மானாலும் கடன் வாங்கலாம்.
திரும்ப செலுத்தாவிட்டால்..?
மற்ற கடன்களைப்போல, இதில் கடனை திரும்பக் கட்டச் சொல்லி கெடு பிடி செய்ய மாட்டார்கள். ஆனால், ஆறு மாதத்திற்குள் பாலிசி கடனுக்கான வட்டியைக் கட்டுவது அவசியம். அப்படி கட்டாமல் விட்டால் வட்டி குட்டி போட்டு கூட்டு வட்டியாக மாறிவிடும். தவிர, பாலிசி முதிர்வடையும் போது கடன் தொகையையும், கடனுக்கான வட்டியை யும் பிடித்தது போக மீதமுள்ள தொ கையைத்தான் பாலிசிதாரருக்கு தருவார்கள். பாலிசி முதிர்வுத் தொகையைவிட கட்ட வேண்டிய கடன் தொகை அதிகமி ருந்தால் பாலிசி தாரருக்கு எந்தப் பணமும் கிடைக் காது. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போ ய்விடும்.
தனியார் வங்கி தரும் கடன்!
எல்.ஐ.சி. மட்டுமல்ல, எந்த இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தின் பாலிசியாக இருந்தாலும் அதன் மேல் கடன் தருகி றது ஹெச்.டி.எஃப்.சி. வங்கி.
”எங்கள் வங்கியில், கடன் பெறத் தகுதி கொண்ட அனைத்து வகையா ன இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளுக்கும் கடன் தருகிறோம் .  இப்போதைக்கு எண்டோவ்மென்ட் பாலிசி, யூனிட் லிங்க்டு (டெப்ட் ஃப ண்ட்) பாலிசிகளுக்கு மட்டும் கடன் தருகிறோம். பாலிசி எடுத்து மூன்றாண்டு காலம் முடிந்த பிறகு சரண்டர் தொகையில் 80% வரை கடன் தருகிறோம்” என்று சொல்லும் இந்த வங்கி 13.75% முதல் 14.75% வரை வட்டி வாங்குகிறது. குறைந்த பட்சம்    2 – 2.5 லட்சம் வரை சரண்டர் வேல்யூ இருந்தால் மட்டுமே இந்த வங்கி யிலிருந்து பாலிசிகள் மூலம் கடன் கிடைக்கும்.”
இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கடன் பெறுவது பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்லிவிட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தா ன்!

No comments:

Post a Comment